Pallainet
December 29, 2016
Manvasam
December 29, 2016
Show all

Nallurkanthan

  • Aboutதமிழ்நாட்டு ஊர்கள் நல்லூர் என்றும், புத்தூர் என்றும் வகுத்துக் கருதலாகும். பெண்ணையாற்றங் கரையில் அமைந்தது. திருவெண்ணெய் நல்லூர். அது சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம். (‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் ’- சுந்தரர்). சைவசமய ஞான நூலாகிய ‘சிவஞானபோத’ த்தை அருளிச் செய் மெய்கண்டதேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர்நீதி என்னும் அடியார் அவ்வூரிலே தொண்டு செய்த சிவப்பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மண்ணியாற்றங்கரையில் முரகவேளின் பெயரால் அமைந்த சேய்சல்லூர் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்கும். “சேயடைந்த சேய்ஞலூர்” என்பது தேவாரம். சூரனோடு போர்செய்யக் கருதி எழுந்த முருகவேள் சிவபெருமானை வழிபட்டுச் சர்வசங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம் சேய்நல்லூர் (சேய்ஞலூர்) என்று கந்தபுராணம் கூறும். வடஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய்நல்லூர் சேனூர் எனப்படும்.